Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 14-04-2014 | Raasi Palan 14-04-2014

பதிந்தவர்: தம்பியன் 14 April 2014

மேஷம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காண வேண்டிய நாள். சந்திர வழிபாட்டால் சந்தோஷம் கூடும். தொழில், உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். உறவினர் வருகை உண்டு.

ரிஷபம்
சிறப்புகள் வந்து சேர சித்ரகுப்தனை வழிபட்டு மகிழ வேண்டிய நாள். பழைய நண்பர்களின் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்
பணவரவு பெருக பவுர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பொது நல ஈடுபாட்டால் புகழ் காண்பீர்கள். உடன் பிறப்புகள் உறுதுணைபுரிவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி
கோவில் வழிபாட்டால் குதூகலம் அடையும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.

துலாம்
காரிய வெற்றி ஏற்பட கணபதியையும், கந்தனையும் வழிபட வேண்டிய நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சகம்
மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். ஆன்மிகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாகச் சில புது முயற்சி எடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள்.

மகரம்
புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். ஆனந்தம் பெருக ஆனைமுகனையும், ஆறுமுகனையும் வழிபட்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்குவதில், விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் மாறும்.

கும்பம்
நம்பிக்கைகள் நடைபெற தும்பிக்கையானை வழிபட வேண்டும் நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வி.ஐ.பி.க்கைளை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்
ஆற்றல் மிக்கவர்களை சந்தித்து ஆனந்தமடையும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 14-04-2014 | Raasi Palan 14-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com