Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 15-04-2014 | Raasi Palan 15-04-2014

பதிந்தவர்: தம்பியன் 15 April 2014

மேஷம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சொல்வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.

ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரம் தரும் தெய்வங்களை வழிபட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். எதிரிகள் விலகுவர்.

மிதுனம்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும்.

கடகம்
உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ ஒத்துழைப்புச் செய்வர்.

சிம்மம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி
வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஆலயவழிபாட்டில் ஆர்வம் கூடும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விரயங்கள் கூடும். பயணத்தால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

விருச்சகம்
சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாள். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். உறவினர் வருகை உண்டு.

தனுசு
புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இறைவழிபாட்டால் இன்பம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

மகரம்
வருமானம் இரட்டிப்பாகும் நாள். தெய்வ வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது. உற்ற நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.

மீனம்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கூடும் நாள். வெளியில் புறப்படும்போது உறவினர் வந்து தொல்லை தரலாம். வழிபாட்டால் வளர்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் இழுபறி நிலை நிலவும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 15-04-2014 | Raasi Palan 15-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com