Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.

பாரிய குற்றங்கள் தொடர்பில் மிகவும் சொற்ப அளவிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொதுநலவாய மாநாடுகளினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரமும் சரியான விடயங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

மோதல் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தியதாகத் தெரிவித்த அவர், பிரதமர் டேவிட் கமரூனும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்  என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் இல்லை: பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com