சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 26 இலங்கையர்களை அந்தமான் தீவுகளுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
அந்தமான் தீவுகளுக்கு அண்மித்த கடற்பரப்பில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்களும், அவுஸ்திரேலியாவுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக பயணித்ததாகவும், அதற்காக கடத்தல்காரர்களுக்கு பெரும் தொகைப் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எந்தவொரு தருணத்திலும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படாது என்று அண்மையில் அறிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சட்டவிரோதமாக ஆஸி நோக்கி பயணித்த இலங்கையர்கள் 26 பேர் கைது!