Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெலுங்கர், தமிழர் பிரச்சனையாகி விடும் போலிருக்கிறது தெனாலிராமன்.

இதில் ரொம்பவே அப்செட் ஆகியிருப்பவர் வடிவேலுதான். இது தொடர்பாக அறிக்கை, பேட்டியென்று ஒருபுறம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முக்கியமானர்வளுக்கு போன் போகிறதாம். சார், நம்ம படத்தையும் வடிவேலுவையும் ஆதரிச்சு ஒரு அறிக்கை கொடுங்களேன் என்கிறார்களாம். கேட்பது சாதாரண நிறுவனமல்ல என்பதாலேயே ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாரதிராஜா, சீமான் என்று தொடரும் இந்த லிஸ்ட்டில் மேலும் ஒருவர் இணைவார் என்கிறார்கள். படம் வெளியாகிற நேரத்தில், தமிழுக்கே அத்தாரிடி என்று வாழ்த்தப்படும் ஒருவரும் அறிக்கை கொடுக்கக் கூடும் என்கிறார்கள். இதற்கெல்லாம் தகுந்த சன்மானம் வழங்கப்படுகிறதோ என்கிற சந்தேகக் கண்ணையும் திறக்கிறார்கள் நிருபர்கள்.

இதற்கிடையில் பாரதிராஜாவின் அறிக்கை பற்றி ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. மத்திய அரசின் அங்கமான தணிக்கை குழுவே சான்றிதழ் கொடுத்தபின்பு, படத்தை வெளியிட விட மாட்டோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்றும் உங்களை போன்ற அமைப்புகளிடம் தனித்தனியாக வந்து படத்தை காண்பித்துதான் சர்டிபிகேட் வாங்க வேண்டுமா என்றும் பொருமியிருந்தார் அவர். டேம் 999, மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களும் முறையாக சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு திரைக்கு வந்த படங்கள்தான். இவர் சொல்வது படி பார்த்தால் அந்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்ததையும் இவர் குறை சொல்வது போலாகிறதே என்பதுதான் பாரதிராஜாவின் அறிக்கையால் வந்திருக்கும் முணுமுணுப்பு.

0 Responses to தெனாலிராமன் படத்திற்காக அறிக்கைகள்? பின்னணி என்னவாம்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com