Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் இப்போது மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.

நேற்று மாலை திருவண்ணமலையில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன.

கடந்த 5ம் திகதி கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. இதை அடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர் சங்கரன் கோயில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ரோபோ எந்திரம் கொண்டு உயிருடன் மீட்டனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.

நேற்று மாலை கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தையை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியினர் விடிய விடிய ஈடுப்பட்டு வருகின்றனர். நவீன் ரோபோ எந்திரம் ஆழ்துழாய் கிணற்றின் உள்ளே செல்ல முடியாதபடி இருப்பதால், மீட்ப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to தமிழகத்தில் 10 நாட்களில் மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது!:மீட்புப் பணிகள் தீவிரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com