2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா கனிமொழி உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்திருக்கிறது.
2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு முறையில் ஊழல் நடப்பெற்றுள்ளது என்று, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் நீதிமன்ற ஆலோசனையின் படி, இந்திய குற்றவியல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக ஆ.ராசாவுக்கு 724 பக்கங்கள் கொண்ட ஆயிரத்து 700 கேள்விகளை சிபிஐ அனுப்பி பதில் கேட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
0 Responses to ஆ.ராசா, கனிமொழி மீது விரைவில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் : சிபிஐ