இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த வாரம் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 52 மீனவர்கள் காரைக்கால மீனவர்கள் மற்றும் அவர்களது 5 விசைப்படகுகள் இன்று காரைக்கால் வந்த நிலையில், மீனவர்கள் தங்களது விலை மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்படையினர் நாசம் செய்தது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பின்றி நடக்க, இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் தமிழக மீனவர்களை ராஜபக்ஷே விடுவித்தமைக்கான காரணத்தை அவர்கள் நாட்டு வீரர்கள் மீனவர்களிடம் தெரிவித்ததையும் மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததன் காரணமாகவே மீனவர்களை ராஜபக்ஷே விடுதலை செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்திய - இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்: மீனவர்கள்