Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் உள்ளக விடயங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது ஜெனீவாவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். எமது உள்ளக விடயங்களில் யாரும் தலையிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எமது நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அதனாலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எமது அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிரானவும் ஜெனீவாவில் போராடியது. நவநீதம்பிள்ளையல்ல, ஒரு நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு இடமளியோம் என்பதை இலங்கையிலும் நாம் மிகத் தெளிவாக கூறியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்ளக விடயங்களில் நவிபிள்ளை தலையிட அனுமதியில்லை: நிமல் சிறிபால டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com