Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்கு நாடுகள் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மீது மேற்கொள்ளும் வழமையான பொருளாதார ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகவே இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அமைந்துள்ளதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற போது கொண்டுவரப்படாத தீர்மானங்கள், நாட்டில் சமாதானம் நிலவும் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளமை அதனை உறுதிசெய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய நாடுகளின் வளர்ச்சியினை நசுக்குவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நாம் செய்யக் கூடிய பணியாகும் என்று குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போது பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சவால்களை வெற்றிகொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டு. இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து மறைமுகமான பொருளாதாரத் தாக்குதல்கள் அல்லது நவ குடியேற்றவாத கொள்கைகள் இலங்கை மீது திணிக்கப்பட்டே வந்துள்ளன. தற்போது இலங்கை மீது நான்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மோதல் நிலவிய காலத்தில் பேசாதிருந்த நாடுகள் சமாதானம் நிலவும் போது அவற்றை குழப்பியடித்து மீண்டும் மோதல் நிலைமையொன்றுக்கு மறைமுகமாக வழி செய்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானம் இலங்கையை ஒடுக்க மேற்கு நாடுகள் மேற்கொண்ட சதி: பஷில் ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com