ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடுகளில் இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பினை வழங்கும் என்று சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்த போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மனித உரிமைகள் மாநாட்டில் சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் செயற்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் சீனா தொடர்ந்து வழங்கி வருகின்ற உதவிகளுக்கும், ஒத்துழைப்புகளும் மகிந்தராஜபக்ஷ, சீன பிரதி வெளிவிவகார அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

0 Responses to ஐ.நா மனித உரிமைகள் மாநாடுகளில் இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவோம் - சீனா