Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார். ஆனாலும், தோல்வி பயத்தில் தற்போது அதனைக் கைவிட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் முடிவுகள் அரசாங்கத்திற்கு சாதகமான நிலைகளைக் காட்டவில்லை. மஹிந்த ரெஜிமெண்டை தூக்கி எறிவதற்கான அறிகூறியாக மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். அடுத்த தேர்தல்களில் அரசாங்கத்தை முழுவதுமாக மக்கள் தோற்கடிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

0 Responses to தோல்வி பயத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை மஹிந்த தவிர்த்துள்ளார்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com