Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முனைப்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளையால் செயற்படுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வரைமுறைகளை மீறியே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தியாவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலையில், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாது என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நவிபிள்ளையால் பிடிவாதமாக செயற்படுத்த முடியாது: தினேஷ் குணவர்த்தன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com