இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை வரவேற்பதாக பிரான்ஸின் பட்டிணிக்கு எதிரான அமைப்பு/ அக்ஷன் (f)பாம் (Action Against Hunger/ Action Faim) அமைப்பு தெரிவித்துள்ளது.
எட்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையின் மூதூரில் தமது தன்னார்வத் தொண்டர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற நிறுவனமான அக்ஷன் (f)பாம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதேபோன்று தமது அமைப்பும் அடைந்த வெற்றியென அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரெய்சி தெரிவித்துள்ளார்.
“நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாக செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதரர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையொன்று கிடைத்துள்ளது. அதன் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும்” என்பதே அதுவென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to இலங்கை மீது சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐ.நா. தீர்மானத்தை வரவேற்கின்றோம்: அக்ஷன் (f) பாம்