Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் பொதுமக்களைச் கைது செய்து, அவர்களது கைவிரல் அடையாளங்களை பலவந்தமாக பதிவு செய்வதற்கு பொலிஸாருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் போதே பிரதம நீதியரசர் மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

உல்லாச விடுதி ஒன்றில் பணிபுரியும் நபரொருவர், தனது பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அவரைக் கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று கைவிரல் அடையாளங்களை பதிவு செய்ததாக அவர் தனது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மோதல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். பொலிஸார் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது. அதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்று பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த நபரிடம் பலவந்தமாகப் பெற்ற கைவிரல் அடையாளங்களை பொலிஸார் அழித்துவிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை: பிரதம நீதியரசர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com