Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஒற்றுமையாக வாழ்வதற்கான வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை புளியங்குளத்தில் இடம்பெற்றது. அதில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ மோதல்களின் பின்னர் எமது மாணவர் சமூகம் பெரும் அல்லல்பட்டு மிகவும் அவலமான நிலையில் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அது துரதிஸ்டவசமான விடயம். மோதல்களின் காரணமாக உங்கள் குடும்பத்தில் பல பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கின்றீர்கள். அவ்வாறு இருதாலும், வருங்காலத்தில் இந்த போட்டிகளும், அறிவு தொடர்பான கல்வியும்தான் எங்களை முன்னேற்றிக்கொண்டிருக்க வேண்டும். அந்த முன்னேற்றத்திற்காக நாம் எல்லோரும் பாடு படுவோமாக. நடந்து முடிந்ததை திரும்பவும் நாம் கொண்டு வர முடியாது.

மாணவ சமுதாயத்தவர்களிடம் நான் கேட்பதெல்லாம் உங்களை நீங்கள் முன்னேற்றிக்கொள்ளுங்கள். இந்த வலயத்திலே 14000 மாணவ மாணவிகள் இருந்ததாகவும், தற்போது 8000 மாணவ மாணவிகளே உள்ளதாகவும் நான் அறிகின்றேன். இது மோதலினால் ஏற்பட்ட துரதிஸ்டவசமான நிலை. ஆனால், வருங்காலத்திலே இவை எல்லாம் மாறி எங்கள் குழந்தைகள் நல்ல நிலையை அடைவார்கள் என்ற எண்ணம் எங்கள் எல்லாரிடமும் உள்ளது“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கடந்த கால நினைவுகளைக் கடந்து; ஒற்றுமையாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com