Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைக்கு சாட்சி மற்றும் ஆதாரங்களை வழங்கும் தரப்பினருக்கான பாதுகாப்பு குறித்து பின்னர் சிந்திக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

சபையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கோரிக்கை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.

இதற்கான நிதி ஒதுக்கம் மற்றும் குழு நியமனம் என்பன மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த குழுவில் சாட்சி வழங்குவோரது இரகசியங்களை பேணும் முறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to சாட்சியங்கள் வழங்குவோரது பாதுகாப்புக் குறித்து சிந்திக்கப்படும் - ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com