Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென முகத்திலறைவது போன்று சொல்லியிருக்கின்றார் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பத்திரிகைக்கு அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கிய செவ்வியினில் ஜெனிவா தீர்மானத்தை தனது சாதனையாக வெளிக்காட்டும் வகையினில் பல கருத்துக்களை தெரிவித்திருந்;தார்.

இதனை விமர்சிக்கும் வகையினில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் இலங்கை அரசு தொடர்பினில் ஜெனீவாவினில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பினில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென தெரிவித்ததுடன் புலம்பெயர் தமிழ் உறவுகளது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அதனை பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

கனடா பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அவுஸ்திரேலியாவென புலம்பெயர் உறவுகள் நீதி கேட்டு போராடிவருகின்றன. அவர்களது போராட்டத்திற்கான வெற்றியே இது. இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் அனைத்து ஆளும் தரப்பும் இந்நாடுகளிற்கு பயணிக்க அஞ்சுகின்றனர். அதிலும் ஜனாதிபதி பிரிட்டனில் நிகழ்வொன்றினில் பேசமுடியாது திருப்;பப்பட்டமை மறக்கமுடியாததெனவும் அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கை அரசு அவ்வமைப்புக்களை தடை செய்ததாகவும் தெரிவித்த அவர் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களல்ல எனவும் புலம்பெயர் தேசங்களிலிருந்து மனித நேய தனிநபர்களுடாகவோ குழுக்களினூடாகவோ உதவிகளை பெற்று வாழந்து வரும் தாயகத்திலுள்ள எமது மக்களே எனத்தெரிவித்தார்.

0 Responses to ஜெனீவா தீர்மானம் தனிநபர் வெற்றியல்ல! போட்டுடைக்கின்றார் சுரேஸ்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com