Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய மற்றும் தென்னாசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஷ்வால், இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது இலங்கை விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ள ஹெரிக் சொல்ஹேய்ம், நீசா பீஸ்வாலுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்தும், இலங்கையில் ஜனநாயகத்தையும், அனைத்தின மக்களுக்கும் சம உரிமையையும் ஏற்படுத்த அமெரிக்க முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை புரிந்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான பிரேரணை அமெரிக்கா நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை விசேடமாக கருதப்படுகிறது.

0 Responses to நீசா பீஷ்வால் எரிக் சொல்ஹெம் இடையே சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com