Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் தலைவர்  சோனியாகாந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகிய  இருவரும் ஒரே நாளில் தமிழகத்தில் நாளை தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

மக்களவைக்கானத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 24ம் திகதி நடைப்பெறவுள்ள நிலையில், தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராகியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருவரும் நாளை ஒரே நாளில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

சோனியாகாந்தி நாளை நாகர்கோயிலில் நடைப்பெறவுள்ள பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். பின்னர் அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வார் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்று தமிழக காங்கிரஸ் தலைமைத் தெரிவித்துள்ளது. மோடி நாளை ஈரோடு, சேலம், திருப்பூர், விருதுநகர் என்றும், பின்னர் அதற்கடுத்த நாள் கோவை உள்ளிட்ட ஊர்களிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

0 Responses to சோனியா காந்தி, மோடி இருவரும் நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com