Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.பல்கலை மாணவர் விடுதியில் சோதனை!

பதிந்தவர்: தம்பியன் 08 April 2014

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர் விடுதியொன்றினுள் உள்நுழைந்து பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. எந்தவித காரணங்களும் இன்றி நேற்றுத் திங்கட்கிழமை காலை விடுதிக்குள் உள்நுழைந்த பொலிஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளதுடன், தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அவர்களது உடமைகள் துருவி துருவி சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.  இதனால் அச்சமடைந்த மாணவர்கள் விடுதியினை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிற்கான விடுதி பற்றாக்குறையினை தவிர்க்க தனியார் வீடுகளை நிர்வாகம் விடுதிகளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ்.பல்கலை மாணவர் விடுதியில் சோதனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com