Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பூசாவினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரை பார்வையிட விபூசிகா செல்லவுள்ளார். சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விபூசிகா அவரது உடமைகள் எடுப்பதற்காக பாதுகாப்புடன் அவர்களது வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகளை எடுத்து வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அடுத்தே அவர் தர்மபுரத்திலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கிளிநொச்சி – சிறுவர் நன்னடத்தை அதிகாரி மற்றும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தலைவர்; ஆகியோர் பொலிஸார் சகிதம் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தாயாரைத் தடுப்பு முகாமுக்குச் சென்று பார்த்து வருவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சேவகரிடம் இருந்தும் விபூசிகா பெற்றுக்கொண்டார்.

பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியான கோபி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் வீட்டில் வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு விபூசிகா அவரது தாயார் ஜெயக்குமாரி ஆகியோர் கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.

0 Responses to பூசாவில் தாயாரைச் சந்திக்கிறார் விபூசிகா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com