Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.நகரினில் மினிபஸ் உரிமையாளர் மீது நேற்றிரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக் கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்தினார். இதன் போது மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சலை ஏற்படுத்தியதுடன்; வாய் தர்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதன் பின்னர் மினிபஸ் உரிமையாளருக்கு குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சம்பவ தினத்தன்று சிவில் உடையில் நின்ற இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு பண்ணை மினிபஸ் நிலையத்திற்கு கைகலப்பில் ஈடுபட்ட நபர் உட்பட 10 சிப்பாய்கள் இராணுவ உடையில் சென்று மகேந்திரராசாவை தனியாக அழைத்தனர். பின்னர் அவரிடம் எவ்வித கேள்விகளுமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றனர்;. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டது.குறித்த படையினர் அங்கிருந்து வெளியேறிவிடாமல் முற்றுகையினில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் யாழ். பொலிஸாரால் ஒரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 Responses to யாழில் தாக்குதல் நடத்திய படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com