Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச நாடுகள்  அறிந்துக் கொள்வதற்காக, சமாதானமானதும், ஜனநாயகமானதுமான வழிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்றும் அவர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யும் வகையிலேயே எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் ஒன்று கூடவிருப்பதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் வேலைத்திட்டம் குறித்து தமிழீழ அரசாங்கம் ஆராய்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com