சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் சட்டத்துக்கு விரோதமான பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
சுகாதார அமைச்சும், நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஒன்றிணைந்து இது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென பணித்துள்ள ஜனாதிபதி, இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் உட்படுத்துமாறு பரிந்துரைந்துள்ளார்.
காலாவதியான மருந்துகள், நறுமணப் பொருட்கள் மற்றும் ஒப்பனைக் களிம்புகள் ஆகியவற்றின் காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்துள்ள நிறுவனங்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைப்புக்களை நடாத்தியுள்ளது. இதன்போது, கைப்பற்றப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அவரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.
மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கும் பொருட்களை விற்பனை செய்ய எவருக்கும் இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

0 Responses to சட்ட விரோத உணவுப் பொருட்களை சந்தைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மஹிந்த