நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை வைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சினை கோத்தபாய ராஜபக்ஷவிடமும், பொருளாதார அமைச்சினை பஷில் ராஜபக்ஷவிடமும், பாராளுமன்றத்தை சமல் ராஜபக்ஷவிடமும் ஒப்படைத்துவிட்டு, அடுத்த ஜனாதிபதியாக மகன் நாமல் ராஜபக்ஷவையும், கடற்படையில் இன்னொரு மகனையும், கடைசி மகனை விண்வெளி ஆராய்ச்சியிலும், உறவினர்களை இராஜதந்திர பணிகளிலும் சேர்த்துக் கொண்டு ராஜபக்ஷ குடும்பத்திடமே நாட்டை சொத்தாக பிரிந்து வழங்கிவிட்டார் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழீழ எண்ணத்திலிருந்து விடுபட்டால் மட்டுமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமை மிகவும் கீழ்த்தரமானது. அது, சிங்களக் கோமாளியின் கதை போன்றதே என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஆட்சி மஹிந்தவிடம், பாதுகாப்பு கோத்தாவிடம், பொருளாதாரம் பஷிலிடம்; எல்லாமே ராஜபக்ஷ குடும்பத்திடம்: ஜே.வி.பி