சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பெங்களூரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஜாமீன் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மத்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
நீங்கள் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நல்ல நேரம் அமைவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். எப்போதும் உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் அமைதி கிடைப்பதற்கு வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ரஜினிகாந்த்தை பாஜகவினர் தமது கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்து வரும் நிலையில் ரஜினிகாந்த்தின் இக்கடிதம் பாஜகவினர் இடையே சற்று சலனத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்.
மேனகா காந்தி
ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
இந்த சம்பவம் (சிறைச்சாலைக்கு சென்றது) நடைபெற்றதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய ஆதரவு மற்றும் அனுதாபம் ஆகியவை எப்போதும் உங்களுக்கு உண்டு. இந்த தருணத்தில் எதுவேண்டும் என்றாலும் மகிழ்ச்சியுடன் உங்களுக்காக செய்ய தயாராக இருக்கிறேன்.
உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த துயரத்தை, நல்லொழுக்கம் மற்றும் துணிவு ஆகியவற்றால் எதிர் கொண்டு துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்கு எப்படி உங்களை நிர்வகிக்கிறீர்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். இந்த கடினமான தருணங்கள் முடிவடைந்து, உங்கள் தலைமையில் மீண்டும் ஆட்சி நிர்வாகம் அமைவதை நாங்கள் பார்க்க முடியும் என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். தமிழ்நாட்டுக்காக நீங்கள் தனிச்சிறப்புடைய குறிப்பிடும்படியான பல்வேறு பணிகளை செய்திருக்கிறீர்கள். உங்களுடைய உடல் நலனை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் உங்களுடைய அபிமானிகள் அதிகமானோர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்ததது மகிழ்ச்சி : ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து