Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழலுக்கும், பணத்திற்கும் விலைபோகும் மக்கள் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே தமது இலக்கு என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே, கையேடுகளை விநியோகிக்கும் திட்டமொன்றை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் விரிவான திட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் பொதுத் தேர்தலின்போது அதிகளவு உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் வகையிலேயே தமது தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டில் சமூக பரிமாற்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 Responses to பணத்திற்கு விலைபோகும் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com