Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட இனவழிப்பு பிரேரணையை வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்குப் (ஜனாதிபதித் தேர்தலுக்கு) பின்னர், சரியான ஆதாரங்களை உள்வாங்கி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு பிரேரணைக்கு தான் எதிரானவன் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், “ஆனால், தற்போதைய காலம் அதற்கு உகந்தது அல்ல. ஏனெனில், அது ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்திவிடும்“ என்றுள்ளார்.

இறுதி மோதல்களின் போது இனவழிப்பு இடம்பெற்றதாக வலியுறுத்தும் இனவழிப்பு பிரேரணை வடக்கு மாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் பேசிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இனவழிப்பு பிரேரணை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com