Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரும் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அந்தக் கட்சியின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன உள்ளிட்டவர்களினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரும் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இரத்தினபுரியில் நேற்று வியாழக்கிழமை கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன உள்ளிட்ட 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நடைபெறும் கூட்டங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஏற்கனவே அறிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரும் கூட்டம்; சு.க.வின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com