Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐனாதிபதி தேர்தலின் பின்னராக அமையும் அரசு தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை நிச்சயமாக வழங்கும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு ஊடகவியியலாளர்களை இன்று கொழும்பில் எதிரணியின் ஊடக இல்லத்தில் சந்தித்த அவர் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் தற்போதைய அரசு போன்று பாராளுமன்றத் தெரிவுக் குழுபோன்று காலத்தை இழுத்தடிப்பதாக அமையாது குறித்த கால எல்லை ஒன்றினுள் தீர்வினை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலும் மாகாண சபைக்கான அதிபாரப் பகிர்வாக அது இருக்கும் எனத் தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மகிந்த ஆட்சியில் பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

முன்னைய மகிந்த ஆட்சியில் இன வாத அடிப்படையிலான தப்புக்களே இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றைத் தர விடாது தடுத்து இருந்ததாகவும் தற்போது எதிரணிக் கூட்டமைப்பில் அதே தரப்புக்கள் இணைந்திருப்பதால் தமக்கான தீர்வொன்று கிட்டாதென தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்.

மகாநாயக்க தேரர் உட்பட எதிரணியில் இணைந்துள்ள அனைவருமே இனப்பிரச்சனைக்கான தீர்வொன்று எட்டப்பட வேண்டுமென்ற ஒரே கருத்தைக் கொண்டிருப்பதாக பதிலளித்தார். தற்போது அவசரமானது சுவாசிப்பதற்கான ஒட்சிசன் அது எங்களுக்கு அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏன் உங்களைப் போன்ற ஊடகவியியலாளர்களுக்கு கூட தேவையாகவே இருக்கின்றது.

இலங்கை முழுவதும் மிக மோசமான ஊடக அடக்குமுறை இப்போது தொடர்கிறது. குறிப்பாக வடக்கில் அது மிக மோசமான கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் ஒரு குடும்பத்திடம் இலங்கை சிக்கி சின்னாபின்னமாகவதை அனுமதிக்க முடியாது. இப்போதைய அவசர தேவை இந்தக் குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டை மீட்பதாகும்.

எதிரணிக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே வௌ;வேறான கருத்துக்கள் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அனைத்துத் தரப்பிற்கும் குடும்ப ஆட்சியில் இருந்து இலங்கையை மீட்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர். எமது நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஐனாதிபதி முறைமையினை இல்லாது செய்வதும் முதன்மையாக இருக்கின்றது.

அமையப் போகின்ற அரசு இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய பேச்சுக்களை நடத்தும். அதுவும் ஒரு கால எல்லைக்குள் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதே வேளை வட மாகாண சபையினை சுமூகமாக செயற்பட விடாது ஆளுநர் தடுக்கின்றாரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் பொருத்தமான ஒருவரை தான் ஆளுநராக நியமிப்பதாக சிரித்தவாறே பதிலளித்தார்.

மோசமான ஊடக அடக்குமுறை தனது ஆட்சிக் காலத்தில் இல்லை என்றும் நினைவுபடுத்திய அவர் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் தனது ஆட்சிக் காலத்திலேயே முன்மொழியப்பட்டதாகவும் நிச்சமாக அது மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

0 Responses to இனப்பிரச்சினைக்கு தீர்வு நிச்சயம்! வட - கிழக்கு பத்திரிகையாளர்களிடம் ரணில்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com