வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை வடக்கு மாகாண சபையோடு கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்று இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையோடு கலந்து ஆராயாமல் குறித்த வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை குறித்த தீர்மானம் கோருகின்றது.
குறித்த தீர்மானம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கில் ஆயுத மோதல் காலங்களில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்கு 65,000 வீடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் அமைக்கப்படும் வீடுகள் வெப்பமான காலநிலையைக்கு பொருத்தமானதாக இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ‘காலநிலைக்கு ஒவ்வாத’ 65,000 வீடுகள் திட்டம்; வடக்கு மாகாண சபையோடு கலந்தாலோசிக்க கோரிக்கை!