Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தற்கொலை முயற்சிக் குற்றம் எனப்பட்டும் தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

தற்கொலை செய்வது குற்றம், எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 309 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்ட அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில், மனிதரின் தற்கொலை முயற்சியைக் குற்றம் என்று சொல்லும் தண்டனைச் சட்டத்தை ரத்து செய்யும் ஆலோசனையைக் கேட்டது.

18 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் மத்திய இந்த முடிவை ஏற்றுக்கொண்ட நிலையில் குற்றவியல் தண்டனைச் சட்டம் 309 பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து விலக்கி சட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to தற்கொலை முயற்சியைக் குற்றம் எனப்பட்டும் தண்டனைச் சட்டம் ரத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com