சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூட்டினால் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் நலிவடையும் என்று அந்தக் கட்சியிலிருந்து அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பு பத்தரமுல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன பொய்யான உறுதிமொழிகளை வழங்கி ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றியுள்ளதாகவும், கட்சி தொடர்பான முடிவுகளை கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க அன்றி வேறொரு குழுவே எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெருந்தொகை பணம் எடுத்துக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்ததாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த திஸ்ஸ அத்தநாயக்க, தனது மனசாட்சியை பணத்திற்கு அடிமைப்படுத்த முடியாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்த போதும், கட்சியை விட்டும் ஒதுங்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சந்திரிக்கா - மைத்திரிபால கூட்டினால் ஐ.தே.க மேலும் நலிவடையும்: திஸ்ஸ அத்தநாயக்க