Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

 திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் நடந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பில், பங்கேற்ற நாடாளுமன்ற சந்திராணி பண்டார, தாம் கட்சி தாவியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தியே என்று குறிப்பிட்டார்.

தாம் ஐதேகவிலேயே பிறந்ததாகவும்,  ஐதேக பின்புலத்திலேயே வளர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்ட சந்திராணி பண்டார, தாம் கட்சி தாவுவதை தனது தந்தையோ ஆதரவாளர்களோ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்கவின் நெருங்கிய நண்பரான சந்திராணி பண்டார, தனது மகனுக்கு வெளிநாட்டில், இராஜதந்திரப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கதாக ஆளும்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

0 Responses to உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் - சந்திராணி பண்டார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com