ஒன்று போனால் இன்னொன்றைப் பெறும் விசேட திறமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உண்டு என்று கூறியுள்ள அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்னும் பலர் அரசாங்கத்தோடு இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டுள்ள நிலையிலேயே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. நல்லது கெட்டது அல்லது நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது கிடைக்கும் பதிலே முக்கியம்.
சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று.
வீழ்ச்சியுறும் கொள்கைகளுடன் தரிசனமில்லாத, எதிர்கால நோக்குகளற்ற திடமான தலைமைத்துவம் இல்லாமல் வீழ்ச்சியுற்றுள்ள நிலைக்கு அக்கட்சி இன்று தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று நல்லது கெட்டது என்றே பார்க்க வேண்டியுள்ளது. திறமையாக செயற்படக் கூடிய குழு அவசியம்.
திஸ்ஸ அத்தநாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த போது குண்டசாலையில் ஐ.தே.க. அமைப்பாளராக அவர் செயற்பட்டார். நாம் இணைந்தே செயற்பட்டோம்.
அரசியல் ரீதியில் நல்லது கெட்டது எனப் பார்க்கும் மாற்றமே தற்போதைய நடைமுறைகளில் பார்க்க முடிகின்றது. இது மக்கள் தீர்மானம் எடுப்பதற்கு இலகுவாக அமைகிறது. அனைவரும் ஒரே கோணத்தில் ஒன்றிணைந்துள்ளோம். இது முக்கியமானது இதனால் இன்னமும் பல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.
கட்சியின் செயலாளர் போகும் போது உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு. எனினும் எமது ஜனாதிபதிக்கு ஒரு விசேட திறமையுள்ளது. கண்ணுக்குக் கண் என பெற்றுக் கொள்ளும் திறமை அது. இங்கிருந்து செயலாளர் போனபோது அங்கிருந்து கட்சியின் பொதுச் செயலாளரே இங்கு வந்துவிட்டார்.
எதிர்வரும் காலங்களிலும் அப்படியே இங்கிருந்து கட்சித் தலைவர்கள் யாராவது போனால் ரணில் விக்கிரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார். அத்தகை திறமை எமது ஜனாதிபதிக்கு உள்ளது. அதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்” என்றுள்ளார்.

0 Responses to எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே அரசோடு இணையும் வாய்ப்புக்கள் உருவாகலாம்: கெஹலிய ரம்புக்வெல