Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகார் மாநிலத்தின் அரா மக்கள் நீதிமன்ற வளாகத்தில், இண்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

எதிவரும் திங்கட்கிழமை இந்தியக் குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தரவுள்ள நிலையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவந்துள்ள தகவல்களின் படி இது ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எனவும் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த தற்கொலைப் பெண் ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தானும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதிகளை தப்ப வைக்க இக்குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு பதற்றத்தை பயன்படுத்தி இரு குற்றவாளிகள் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி ஆவார்.

0 Responses to பீகாரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : மூவர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com