Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்ட நிபுணர்களை ஆதாரம் காட்டி, இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குகுவதற்காக மார்டி அதிசாரி தலைமையிலான மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவில் அறிக்கையை தயாரித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை வரும் மார்ச் 26ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணை அறிக்கை தயார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com