தேசிய இனப்பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வாக அதிகாரப் பரவலாக்கமே அமைய முடியும். மாறாக, 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக அமைய முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ் கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பின் 13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல. அதிகாரப் பகிர்வே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள போதும் இதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
13வது திருத்தமானது பலமிழக்கச் செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது. சமத்துவம், சகலரும் சம உரிமையுடன் கெளரவத்துடன் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். மத்திய அரச நிர்வாகமும் மாகாண அரச நிர்வாகமும் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் மக்களை முன் கொண்ட கொள்கைகள் மற்றும் உங்களது தலைமைத்துவத்தின் காரணமாக மக்கள் எதிர்பார்த்த இலக்கை எட்ட முன்னோக்கி செல்ல முடிகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்பின் வடிவமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
நியாயமான அதிகாரப் பகிர்வு காரணமாக அந்த கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. குஜராத்திற்கான உங்கள் எதிர்கால இலக்கில் நீங்கள் பல்துறைகளிலும் வெற்றிகரமாக முன்னேற உங்கள் கொள்கைகள் உறுது ணையாகியுள்ளன.
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் சகல துறைகளிலும் குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற வேண்டியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றனர். அதற்காக நான் இந்திய பிரதமருக்கு நன்றி கூறுகின்றேன்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. இலங்கையின் தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா முழுமையான உதவி வழங்க வேண்டியது முக்கியமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ற்கு அப்பால் சென்று பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகத் தெரிவித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான உதவியினை இந்தியா வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இராமர் காலத்திலிருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் உள்ளன. இந்த உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு; 13வது திருத்தம் இறுதித் தீர்வு அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்