Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிலைப்பாடுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதோடு அதிமுக சார்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அதிமுகவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.அது தமிழ் மற்றும் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபடுவது என்பதுதான், நிலம் கையகப் படுத்துதல் மசோதாவில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது என்பதால்தான் அதிமுக அதை ஆதரித்தது.

பொய்யான கருத்துக்களை வெளியிட்டு விவசாயிகளைப் பிரிக்க முடியாது என்பது கருணாநிதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவித்து வந்த அதிமுக இப்போது ஆதரவு தெரிவித்துள்ளதன் உள் நோக்கம் குறித்து கருணாநிதி விமர்சித்து இருந்தார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கருணாநிதியின் கருத்துக்குக் கண்டனம்: ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com