Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அண்மையில் அபிஜித் ராய் என்ற வங்காள அமெரிக்க இணையத் தள கட்டுரையாளர் (பிளாக்கர்) மத அடிப்படை வாதிகளால் கொல்லப் பட்டிருந்தார்.

இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள் அந்நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு பிளாக்கரான 27 வயதாகும் வாஷிகுர் ரகுமான் மிஷு என்பவர் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் நீளமான கத்தியால் வெட்டப் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்று திங்கட்கிழமை காலை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் படுகையில் வழியிலேயே மரணமடைந்துள்ளார்.

இவர் தனது பிளாக்கரில் நாத்திகப் பார்வைகளுடன் கூடிய அரசியல் கருத்துக்களைப் பதிவு செய்து வந்ததால் இவரைப் பிடிக்காத மத அடிப்படை வாத கும்பலைச் சேர்ந்த 3 மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். அபிஜித் ராயின் படுகொலையே சர்வதேசத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருந்த நிலையில் இன்று நடைபெற்றஅடுத்த எழுத்தாளரான வாஷிகுர் ரஹ்மானின் படுகொலை வங்கதேச மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளதுடன் தலை நகர் டாக்காவில் நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளைத் தாம் கைது செய்திருப்பதாக வங்க தேசப் போலிசார் அறிவித்துள்ளனர். இது குறித்து வங்கதேச உள்ளூர் போலிஸ் தலைவரான வஹிடுல் இஸ்லாம் கருத்துத் தெரிவிக்கும் போது குறித்த எழுத்தாளரைக் கத்தியால் தாக்கி வீழ்த்திய பின் தப்பிச் சென்ற போது உடனடியாக இவர்களை கைது செய்யப் பட்டதாகத் தெரிவித்துள்ளார். 3 ஆவது நபரை தீவிரமாக வலை வீசித் தேடி வரும் போலிசார் கைதான இருவரும் மாணவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொல்லப் பட்ட வாஷிகுர் ரகுமான் முற்றிலும் நாத்திகர் அல்ல எனவும் அவர் மத நம்பிக்கை உடையவர் என்ற போதும் அவரது பார்வை மதத் தீவிரவாதிகளின் பார்வையை ஒத்ததாக இருக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டிலும் மத அடிப்படை வாதிகள் வங்க தேச எழுத்தாளரான ஹுமாயுன் அசாட் இனைக் கூரான அகலக் கத்திகளால் தாக்கியிருந்தனர். எனினும் இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்த அசாட் ஆனால் அதே வருடம் மர்மமான முறையில் ஜேர்மனியில் மரணித்திருந்தார். உலகில் பத்திரிகைச் சுதந்திரம் மிகக் குறைவாக மீறப்படும் 180 நாடுகளில் 146 ஆவது இடத்தில் பங்களாதேஷ் இருப்பதாக எல்லைகளற்ற மீடியாக் குழு நிருபர்கள் கடந்த வருடம் அறிவித்திருந்தது. சுமார் 160 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பங்களாதேஷில் கடந்த சில வருடங்களாகவே சமூகங்கள் மற்றிலும் அரசியலில் மதத்தின் ஆதிக்கம் நிலவும் காரணத்தால் மக்கள் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பங்களாதேஷில் 2 ஆவது வலைப்பதிவர் படுகொலை!: எழுத்துரிமை கோரி ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com