Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளநாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் விசாரணை நீதியைப் பெற்றுத் தராது என்று வலியுறுத்தியுள்ள போராட்டக்காரர்கள், சர்வதேச விசாணை அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில், யாழ் செயலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to காணாமற்போனோரை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள் இன்றும் முன்னெடுப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com