இலங்கையின் மன்னராக வலம் வந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிய மஹிந்தர் இன்னும் தனது தோல்வியில் இருந்து மீளமுடியாமல் கண்டபடி உளறிக் கொண்டிருக்கின்றார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியெளித்துள்ள மஹிந்தர், தன்னைச் சூழ்ச்சி செய்து தோற்கடித்து விட்டார்களாம்.
அதாவது இந்நியாவின் றோ என்ற வெளிநாட்டு உளவுப் படையும் அமெரிக்காவின் சீ.ஐ,ஏ என்ற உளவுப் படையினரும் திட்டமிட்டு தனக்கு சூழ்ச்சி செய்து தன்னைத் தோற்கடித்து விட்டார்கள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலும் கடந்த வாரம் கொழும்பு வந்த பாரதப் பிரதமர் மோடியிடம் தனது மனக்குமுறலையும் கொட்டியுள்ளார். அதனால் மோடியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
மஹிந்தரின் பரிபூரண கட்டுப்பாட்டில் அவரது சகோதரர் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் முழுப் படையினரையும் வைத்துக் கொண்டு குடும்ப ஆட்சி நடத்திய மஹிந்தர், தனக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள் என்றால் நம்பக் கூடிய கதையாகப் பார்க்கலாமா?
அப்படியானால் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் என்ன செய்தார்கள்? மஹிந்தர் ஒரு போதும் தான் தோற்றுவிடுவோம் என்றோ தான் செய்த பித்தலாட்டங்கள் தனக்கு எதிராக ஒரு நாள் அரங்கேறும் என்றோ கனவிலும் அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கிய மஹிந்தர் அடுத்த அதிபரும் நான்தான் என்று மார்தட்டினார்.
சிலவேளை நீங்கள் தோற்றால் நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி நடக்குமா என்ற கேள்விக்கு நான் தோற்றால்தானே அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.
இறைவனை மறந்து தான்தான் கடவுள், தான்தான் இந்த நாட்டின் மன்னர் என்று அமைச்சர்களையும் அடக்கி நாட்டின் தேசிய நிர்வாகத்தை தனது குடும்ப ஆட்சி கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு படையையும் ஊக்குவித்துக் கொண்டு ஆட்சி செய்த கொடுமையின் விளைவுதான் மஹிந்தரின் தோல்வி என்பதுதான் உண்மை.
றோவும் சீ,ஐ,ஏ யும் என்ன கள்ள வாக்கு அளித்தார்களா? அல்லது இலங்கைக்குள் மஹிந்தருக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தார்களா? இல்லையே. மஹிந்தரின் இந்தக் குற்றச் சாட்டு நகைப்புக்குரியது.
இன்னும் இரண்டு வருடம் இருக்கின்றது. தேர்தல் இப்போதைக்கு வேண்டாம் என்று சபாநாயகர் சமல், கோத்தபாய, பசில், புதல்வன் நாமல் மற்றும் மஹிந்தரின் முழுக் குடும்பமும் சேர்ந்து மஹிந்தரை வலியுறுத்தியது.
யாரின் சொல்லையும் கேட்காது தேர்தல் நடத்தி வென்று விடலாம் என்ற மமதையில் இறைவனை மறந்து மஹிந்த ஆடிய ஆட்டத்திற்குக் கிடைத்த பரிசளிப்புத்தான் இந்தத் தோல்வி.இந்தத் தோல்வியைத் தாங்காது ஜீரணிக்க முடியாமல் இப்போது பல காரணங்களை மஹிந்தர் சொல்லி வருகின்றார்.
சீனாவின் ஆதிக்கம்
சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்குள் ஆபத்தானது, ஆட்சிக்கு ஆபத்தானது, இந்தியாவை ஓரங்கட்டி இலங்கை ஆட்சி செய்தால் இந்தியாவின் தற்துணிவு என்பது ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தி விடும் என்பதற்கு மஹிந்தரே சாட்சியாக உள்ளார்.
காரணம் கடந்த வாரம் கொழும்பு வந்த மோடியிடம் மன்னர் மஹிந்தர் இந்தியாவின் றோ பற்றி முறையிட்டார். தனது தோல்விக்கு முழுக் காரணம் றோதான். நீங்கள் அல்ல என்ற குற்றச்சாட்டை மோடியிடம் நேரடியாக இந்தியா இல்லத்தில் வைத்து மஹிந்தர் முறையிட்டார்.
அதனால் மோடியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தர் கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில்,
தன்னை இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவு அமைப்புக்களும் இணைந்து சூழ்ச்சி செய்து தோற்கடித்து விட்டார்கள் என்று பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதன் பின்புதான் பிரதமர் மோடி கொழும்பு வந்தார். கொழும்பு வரும் மோடியைச் சந்திக்க வேண்டும் என்று மஹிந்தர் இந்திய தூதரகம் ஊடாக அணுகிய போது மோடியைச் சந்திக்க தூதரகம் மறுத்து விட்டது. ஆனாலும் மஹிந்தரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று மோடி விரும்பினார்.
அதன் விளைவு இந்தியா இல்லத்தில் இலங்கை விஜயத்தை முடித்து விட்டு இந்தியா கிளம்பவிருந்த இறுதித் தருணத்தில் 10 நிமிடங்கள் மோடியைச் சந்தித்த மஹிந்தர். தனது மனக் குமுறலையும் தனது தோல்விக்கு முழுக்காரணம் றோ என்றும் றோ மீதான துற்றச் சாட்டையும் முன்வைத்தூர்.
ஆனால் நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை என்றார். றோ மீதான குற்றச் சாட்டுக்களுக்குப் பதில் அளித்த மோடி, மஹிந்தரின் குற்றச்சாட்டுக்களுக்கு மோடி தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார். அத்துடன் பின்வரும் தனது கருத்தையும் மஹிந்தரிடம் மோடி முன்வைத்தார்.
ஒரு நாட்டின் புலனாய்வு பிரிவானது அந்த நாட்டுக்குத் தேவையான அங்கம். அந்த அங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது என்பது இந்தியா மீது குற்றம் சாட்டுவது போன்றதாகும்.
றோ என்பது இந்திய மத்திய அரசின் முக்கியமான பிரிவாகும். எனக்கு அதற்கான தார்மீக பொறுப்பு உள்ளது. அந்த அமைப்புடன் எனக்குத் தொடர்பில்லையென்று கூறி என்னைச் சமாளிக்க வேண்டாம் என்றார்.
நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுக்கும் இராஜதந்திரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அனுபவமுள்ள அரசியல்வாதியான உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்றால் நீங்கள் அரசியலில் ஈடபட வேண்டாம் என்றார் மோடி.
அப்படி நீங்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது உங்கள் நாட்டுக்குப் பெருத்த சேதம் என மஹிந்தவிடம் மோடி தெரிவித்துள்ளார்.
மஹிந்தர் அமைதியாக மோடியின் உபதேசங்களைக் கேட்டுவிட்டு வெளியேறினார். இதன் பின்புதான் கொழும்பில் இருந்து இயங்கிய றோவின் பிரதானியான பிரதித் தூதுவர் இளங்கோ மீது மஹிந்தர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கின்றார்.
இந்தியாவை ஓரங்கட்டும் ஆட்சிக்குத் தண்டனை
இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு, இந்தியாவை கிள்ளுக் கீரையாக நினைத்து இலங்கையில் யாராவது ஆட்சி செய்தால் அதை இந்தியா பார்த்துக் கொண்டு இருக்காது என்பதுடன் அது தண்டனைக்குரிய குற்றமாகவே இந்தியாவால் பார்க்கப்படுகின்றது.
எழுதப்படாத தண்டனையாகவும் பார்க்கப்படுகின்றது. இந்திய பிரிமினல் கோர்ட் பராவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தியாவின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறிக் கொண்டு மஹிந்தர் சீனாவுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவு இந்தியாவின் சீற்றத்திற்கு ஆளானார்.
சீனக்குடா விமான நிலையம் சீனாவுக்கு வழங்கும் திட்டம், சீன இராணுவப் பிரதானி சீருடையுடன் கொழும்பு வந்தது, சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு வந்தது போன்றவற்றால் புது டில்லி சற்றுக் கலங்கி நின்றது.
அதன் பின்புதான் டில்லி சவுத் புளக் கொள்கை வகுப்பாளர்களும் டில்லியிலுள்ள றோ அதிகாரிகளும் இணைந்து இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியை முடுக்கி விட்டார்கள்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது என்பது முழு உலகத்திற்கும் தெரிந்து விட்டது. இந்த நிலையில்தான் மஹிந்தர் ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவித்தார்.
ஏற்கனவே சிங்கப்பூரில் முகாம் அமைத்து சந்திரிகா அம்மையார் ஊடாக காய் நகர்த்திய இந்தியாவின் றோ உயர் மட்டமும் அமெரிக்காவின் சீ.ஐ,ஏ யும் இந்த தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தியது. ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. மஹிந்தர் தான் தோல்வி கண்டு 2 மாதங்கள் கடந்த நிலையில்தான் தனது தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.
இப்போதுதான் தனது தோல்விக்குப் பின்னால் இருந்த காரணிகளைக் கண்டுள்ளார். முட்டாள்தனமான ஆட்சியும் முற்போக்குச் சிந்தனையுமின்றி முழுக்குடும்பமும் நாட்டின் வளங்களையும் விற்று, கொள்ளையிலும் பெருத்த ஊழலிலும் ஈடுபட்டார்களேயொழிய தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எந்வொரு நடவடிக்கையும் செய்யவில்லை என்பது மட்டும் தெரிகின்றது.
மக்களையும் நாட்டையும் ஒரு இராணுவப் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஒரு பயங்கரவாதத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு வெள்ளைவான் கலாச்சாரத்தையும் ஏற்படுத்தி நாட்டை சீரெழித்து விட்டு இப்போது அழுது என்ன பயன்.
ஆண்டாண்டுகள் புரண்டாலும் அழுது புரண்டாலும் மாண்டோர்கள் வருவதில்லை மன்னர் மஹிந்தரே.
தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை மஹிந்தர் இழந்து விட்டார். இந்த வாய்ப்பை இனிமேல் மஹிந்தர் எட்டிப் பிடிப்பது என்பது மிகவும் கடினமானது. எட்டிப் பிடிக்கப்பார்க்கின்றார். மஹிந்தர் தேர்தலிலில் களமிறங்கினால் சாத்தியமானதுதான். ஆனால் மஹிந்தரை தேர்தலில் களமிறங்க விடாமல் தடுப்பதற்கான பலவகையான வழிமுறைகளை அதிபர் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர்கள் கையாளக் கூடிய வகையில் உள்ளார்கள்.
மஹிந்த அணியினருக்கு ஆப்பு
மஹிந்தரின் பீரங்கிப் பேச்சாளர் விமல் வீரவன்ச சற்று அடங்கி விட்டார்.அவரது மனைவி கடவுச் சீட்டு வழக்கில் சிக்கிய பின்பு விமலின் சுதி சற்றுக் குறைந்துள்ளது எனலாம். மஹிந்த அணியான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கட்சியில் அங்கம் வகித்து வந்தார்கள்.
இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மஹிந்தரின் சகோதரர் பசில் தலைவராக இருந்து வந்தார். மஹிந்தர் தோல்வியடைந்த பின்பு பசில் அமெரிக்கா பறந்து விட்டார்.
கடந்த வாரம் இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் தலைவராக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தரின் தீவிர ஆதரவாளர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ. உதய கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி சார்பாக போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்க மாட்டாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இந்த நால்வரும் எந்த அணியில் இருந்து நாடாளுமன்றம் செல்வார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஆனால் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இந்த நால்வரும் இணைந்து புதிய கட்சியொன்றின் உருவாக்கம் பற்றிச் சிந்திப்பதாகவும் அந்தக் கட்சிக்கு கோத்தா தலைமை தாங்கி செயல்படவுள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய கட்சியின் மூலமாக கோத்தா நாடாளுமன்றம் சென்று தனக்கு எதிராகவும் தனது குடும்பத்திற்கு எதிராகவும் அரசாங்கம் அவதூறு விளைவித்து வருவதாகவும் பயங்கரவாத்தை ஒளித்துக் கட்டிய எங்கள் குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்க, ஒழிக்க சதி நடைபெற்று வருகின்றது என்று மக்களிடத்தில் ஒரு அனுதாப அலையை உருவாக்கி,
இந்த 5 பேருடன் கோத்தா அணியின் இன்னும் சிலர் நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்றத்தில் ஒரு அமளிதுமளியை உருவாக்கி அமையப் போகின்ற ஆட்சிக்கு எதிராக காய்நகர்த்தும் பணிகளில் கோத்தா களமிறங்கி வருவதாகவும் அதற்காகத்தான் கொழும்பு கண்டி ஆகிய பகுதிகளில் மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அறியப்படுகின்றது.
இதன் மூலமாக வெகு விரைவில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கி மஹிந்தரை பிரதமராக்கலாம் என்று மஹிந்த அணியினர் கணக்கு ஒன்று போட்டுள்ளார்களாம்.
எதிர்வரும் காலங்களில் நாட்டின் சகல பகுதிகளிலும் இந்த அணியினர் மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது.
மஹிந்த ஆதரவான இந்த அணியினர் எப்படியாவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் புகுந்து நாடாளுமன்றத்தில் மஹிந்தவின் துதிபாடி மஹிந்தவின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து புதிய அதிபருக்கு எதிராக சில இடைஞ்சல்களைச் செய்து நாடாளுமன்றத்தை முடக்கக்கூடியவாறு சில முன்னெடுப்புக்ளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த சில இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையிலே மஹிந்த அணியின் இந்த முன்னெடுப்பானது புதிய அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விடயமாகும். ஜனநாயக முறையில் இந்த அணியினர் நாடாளுமன்றத்தில் சில நகர்வுகளை நகர்த்துகின்ற போது புதிய அரசு பல சிக்கல்களில் சிக்க வேண்டிவரும்.
அதனால் அரசு விமல் வீரவன்ச மற்றும் கோத்தபாய போன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு தேர்தலில் இவர்கள் போட்டியிட முடியாதவாறு சில நடவடிக்கைகளை அரசு செய்யவில்லையென்றால் இந்த அரசின் ஆயுட்காலம் மிகவும் குறைந்து, மஹிந்த பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
ஆட்சி மாற்றம் விரும்பும் சீனா, பாகிஸ்தான்
மஹிந்தவை பிரதமராக வெற்றியடைய வைத்து புதிய பிரதராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான பணப்பட்டுவாடாவை சீனா. பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாரி இறைக்கத் தயாராகவுள்ளாகவும் அறிய வருகின்றது.
ஏட்டுக்குப் போட்டியாக இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கும் ஆள்மாற்றத்திற்கும் சீனா இந்தியா ஆகிய நாடுகள் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.
ஆனால் பிரதமர் ரணில் மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள நல்ல பாதுகாப்பு அரண்களை அமைக்கவில்லையென்றால் இந்த ஆட்சி பறிபோகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனலாம்.
சந்திரிகா ஆட்சிக் காலத்தில் ரணில் ஏற்கனவே பிரதமராக ஒரு வருடம் மட்டும்தான் இருந்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் சந்திரிகா சுதந்திரக் கட்சியின் சார்பாக பிரதமர் வே;பாளராக களமிறங்கக்கூடிய நிலையொன்று உருவாகி வருகின்றது.
அப்படி சந்திரிகா பிரதமர் வேட்பாளராக இறக்கப்பட்டால் ரணில் பிரதமராகும் வாய்ப்பு அரிதாகி விடும்.அதனால் ரணில் மீண்டும் எதிர்கட்சித் தலைவராகலாம். அதனால்தான் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் ஒன்றிற்குச் செல்ல வெண்டும் என்று ரணில் விரும்புகின்றார்.
பொதுத்தேர்தல் பிந்துமானால் ரணில் வெற்றியடையும் வாய்ப்பும் குறைந்து ரணிலுக்குப் போட்டியாக சந்திரிகா வந்து விடுவாரோ என்ற அச்சம் ரணிலுக்குள்ளது.
ரணில் ஒரு ராசியில்லாதவர் என்ற கதையொன்றும் உள்ளது. இந்த நிலையில் சந்திரிகா பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் நாட்டில் மீண்டும் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய அதிக வாய்ப்புள்ளது எனலாம்.
எம்.எம்.நிலாம்டீன்

0 Responses to மஹிந்தரின் தோல்வியின் மனக்குமுறலும் மோடியின் உபதேசமும் - எம்.எம்.நிலாம்டீன்