Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து விவசாயிகளை தவறாக வழிநடத்துவது பிரதமர் நரேந்திர மோடி தான் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

மனதின் குரல் எனும் நிகழ்ச்சி மூலம் விவசாயிகளிடம் பேசிய நரேந்திர மோடி, நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை அளித்து விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாகவும், அதனை நம்பவேண்டாம் எனவும் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்துக் கூறியுள்ள அண்ணா ஹசாரே, மோடி சொல்வது போல இந்த சட்டம் விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் அரசு இதே சட்ட மசோதாவை கொண்டு வந்த போது அதை எதிர்க்காத பாஜக தற்போது அதில் மாற்றம் கொண்டு வர நினைப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு அரசு உதவ நினைத்தால், விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களை மட்டுமே கையகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்ததுடன், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அண்ணா ஹசாராவின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையே எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to விவசாயிகளை தவறாக வழிநடத்துவது மோடி தான்: அன்னா ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com