Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு வருடத்துக்கு முன்னர் வரை தடைப்பட்டிருந்த எமது உரிமைகளும், அதிகாரங்களும் தற்போது சிறிது சிறிதாக எம்மை நோக்கி வருகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பட்டதாரிகள் 252 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லாட்சிக்கு வித்திட வேண்டும் என்பதே எமது நோக்கம். மத்திய அரசாங்கமும் அந்த நோக்கத்துடனேயே இருக்கின்றது. நல்லாட்சி என்பது வெறும் பெயரளவிலான கொள்கையாகாது. எமது ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்களின் பார்வைக்கும் கணிப்பீட்டுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகுவதும் கூட நல்லாட்சி தான். அத்துடன், மக்களின் மனம், தேவை, சிந்தனை, செயல்திறன், சிந்தனை திசை ஆகியவற்றை அறிந்து மாண்புடன் செயற்படுவதுதான் நல்லாட்சி.” என்றுள்ளார்.

0 Responses to தடைப்பட்டிருந்த உரிமைகள் எம்மை நோக்கி வருகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com