Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாணத்துக்கான மூன்று நாட்கள் கொண்ட விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக வடக்க மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே, முதலமைச்சர் அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கவில்லை என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையில் எந்தவித பிரச்சினையும் தற்போது காணாப்படாத நிலையில், பிரதமரின் வடக்குக்கான விஜயத்தின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஏன் அழைக்கவில்லை என்பது கேள்விக்குரியதே?, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரை அழைக்காமல் இருந்ததற்கு காரணம் தெரியவில்லை. அதேசமயம், இதை பாரிய பிரச்சினையாக்க வேண்டிய அவசியமும் இல்லை. எவ்வாறெனினும், பிரதேசத்துக்கு பிரதமரொருவர் விஜயம் செய்வாராயின் அந்த விஜயம் தொடர்பில் முதலமைச்சர்களுக்கு அறிவிக்கப்படுவதே வழமை. இருப்பினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு அதிகாரியும் அறிவிக்கவில்லை.” என்று சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ரணிலின் வடக்கு விஜயத்தின் போது விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: சி.வி.கே.சிவஞானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com