Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் காணி உரிமையை சீனாவுக்கு வழங்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பொருத்தமான முறையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்ட ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பொருத்தமில்லாத அம்சங்கள் பல உள்ளன. சூழல் மற்றும் ஏனைய மதிப்பீட்டுகளை மறந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பது தவறான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கும்- சீனாவுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தில் காணப்படும், காணி உரிமை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். இலங்கையின் எந்தவொரு காணியும் வேறு ஒரு அரசுக்கு உரிமையாக்கப்பட முடியாது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to எமது நாட்டின் காணி உரிமையை சீனாவுக்கு வழங்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com