Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை வடகிழக்கு நைஜீரியாவில் வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்த போது அவற்றிட்கு அண்மையில் மர்ம துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எதிரணி அரசியல்வாதி ஒருவர் உட்பட குறைந்தது 15 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

1999 ஆம் ஆண்டு நைஜீரியாவில் இராணுவ ஆட்சி நிறைவு பெற்றதற்குப் பின்னர் அங்கு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் முக்கிய தேர்தல் இதுவாகும்.

பிராந்திய மற்றும் சமய அடிப்படையிலான சிக்கலான பூர்விகக் குடிகளின் கலவைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நைஜீரியாவின் தற்போதைய அதிபர் குட்லுக் ஜொனாதன் மற்றும் முன்னால் இராணுவத் தளபதி முஹம்மது புஹாரி ஆகியவர்களுக்கு இடையே மிகக் கடுமையான போட்டி இத்தேர்தலில் நிகழலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்நிலையில் தற்போதைய தேர்தலானது ஆப்பிரிக்காவின் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் தற்போது பதவியில் இருக்கும் தலைவரை அகற்றி அவ்விடத்துக்கு எதிரணிப் போட்டியாளரைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புடைய முதல் தேர்தல் என்பதனால்  அங்கு கடுமையான அச்சமும் இன்னும் அதிக வன்முறைகள் நிகழலாமோ என்ற கலக்கமும் பொதுமக்களிடையே தோன்றியுள்ளன.

இந்நிலையில் தான் அண்மையில் dukku in kombe பகுதிக்கான எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 8 பேர் இனம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னால் போக்கோ ஹராம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகின்றது. ஜனநாயகத்தை அடியோடு எதிர்க்கும் போக்கோ ஹராம் ஷரியா சட்டத்துக்கு அமைவாக நைஜிரியாவில் ஆட்சியை அமைக்கவும், மேற்குலகக் கல்வியை அடியோடு ஒழிப்பதற்கும் முயன்று வருகின்றது. இவர்களது தலைவர் அபூபக்கர் ஷெக்காவு வாக்களிக்கச் செல்பவர்களைக் கொலை செய்வோம் என ஏற்கனவே மிரட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக நைஜீரியா உட்பட அதன் அண்டை நாடுகளான சாட், கமெரூன் மற்றும் நைகர் ஆகியவற்றின் கூட்டு இராணுவத் தாக்குதல்களில் போக்கோ ஹராமிடம் இருந்து பல பிரதேசங்கள் கைப்பற்றப் பட்டுள்ள போதும் இன்னமும் பொது மக்கள் மீது மோசமான தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றை மேற்கொள்ளும் ஆற்றலை அவ்வியக்கம் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நைஜீரியாவில் இப்போது நடந்து வரும் தேர்தலில் சுமார் 56.7 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்பதுடன் இதற்காக நாடு முழுதும் சுமார் 120 000 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டும் உள்ளன.

0 Responses to நைஜீரியாவில் வாக்குச் சாவடிகளுக்கு அண்மையில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com