Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது. அது, நாட்டின் இறைமையப் பாதிக்கும் என்று பிவித்துரு(தூய) ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்து இனவாதமானது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற சர்ச்சை ஆரம்பித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வலுவிழந்திருக்கும் நிலையில் யாரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமைய அது தீர்மானிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் அது இனவாதத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறும் கருத்து பிழையானது. அவ்வாறு எவராவது கூறுவார்களாயின் அவர்கள் நாட்டில் சுமுகமான நிலை ஏற்படவேண்டும் என்பதை மனதார விரும்பாதவர்களாகவே இருப்பார்கள். இவ்வாறான கருத்துக்களே இனவாதத்தைத் தூண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to உதய கம்மன்பிலவின் கருத்து பிழையானது; எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com