வடக்குப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிப்பதும் மனிதாபிமான ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் நன்கு அறியப்பட்ட சர்வதேச தர உரிமைகளின் அடிப்படையில், அதாவது ஜெனிவா பிரகடனத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளில் பொதுமக்களது காணிகளின் ஒருபகுதியை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வளலாயில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பெருமளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர், "போர் முடிந்த பின்னரும் நீண்ட காலம் மறுக்கப்பட்டு வந்தது மக்களுக்கு மீண்டும் கிடைக்கின்றது என்ற எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்பின் வாசலில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு சட்டபூர்வமாக உரித்துடைய விடயங்கள் கிடைப்பதற்கு தாமதப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு மக்கள் காரணம் அல்ல.
விவசாய வளம் நிறைந்த பகுதிகள் உரிமையாளர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். அங்கு மரக்கறி பழவகைகள் என்பன அவர்கள் பயிர் செய்கின்றனர். அதற்கு எந்த வாடகையும் செலுத்தப்படுவதில்லை. 2013 ஆம் ஆண்டு வரையில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் வீடுகள் இருந்தன. ஆனால் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக அவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
மாகாணத்தின் முதல் குடிமகன் என்ற ரீதியில் நான், கட்டங்கள் இடித்தழிக்கப்படும் பகுதிக்குச் செல்ல முயன்ற போது எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. சகல அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
மயிலிட்டி துறைமுகம் நாட்டுக்குத் தேவையான மீன் உற்பத்தியின் மூன்றிலொரு பகுதியை பூர்த்தி செய்தது. அந்த துறைமுகம் இருந்த பகுதிக்கு மக்கள் மீளவும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களால் தங்களது மீன்பிடி நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
சில கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் பல கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. மக்களின் வளம்கொழிக்கும் விவசாய மண்ணில், இராணுவத்தினரின் விளையாட்டு மைதானம் அமைவது இனிமேலும் அனுமதிக்க முடியாது. இராணுவ அதிகாரி திலகரட்ண என்னை கடந்த செவ்வாய்கிழமை, வளலாயிலிருந்து, வல்லை அச்சுவேலி வீதியூடாக அழைத்து பலாலிச் சந்தி வரையில் கூட்டிச் சென்றார். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த வீதியில் இராணுவத்தினர் பாதுகாப்புத் தூண்களை அமைத்துள்ளனர்.
197 ஏக்கர் நிலத்தை வயாவிளானில் விடுவிப்பதாகச் சொல்லி விட்டு, 90 வீதமான நிலப் பரப்பை அவர்கள் விடவில்லை. இராணுவத்தினர் இவ்வாறு வீதியின் இடையில் தடுப்பு வேலி அமைத்துள்ளதால், மக்கள் பாடசாலைக்கோ, பிரதேச செயலகத்திற்கோ செல்ல வேண்டுமாக இருந்தால் பல கிலோ மீற்றர்கள் தேவையில்லாமல் சுற்ற வேண்டியிருக்கின்றது. விடுவிக்கப்பட்ட வயாவிளான் கிராமத்தின் தோலகட்டி பகுதிக்குச் செல்வதற்கு நான் நேற்று மாலை (நேற்று முன்தினம்) முயற்சித்த போது இராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இராணுவத்தினர் இப்போது கையளிக்கும் பகுதிகள் விவசாய வளம் குன்றிய பகுதிகள். இராணுவத்தின் வசம் இருக்கின்ற பகுதிகளில் விவசாயம் செய்கின்றனர். மக்களின் காணிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருப்பவர்கள் அதனை கையளித்துச் செல்வது அவர்களுக்கு கஷ்டமானதாகத்தான் இருக்கும். J/244 மற்றும் J/252 ஆகியவற்றில் முன்னரே உறுதியளிக்கப்பட்டவாறு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் மக்கள் ஏமாற்றம் அடைவர்.
வன்னியில் இராணுவத்தினர் மாத்திரம் காணிகளை கையகப்படுத்தவில்லை. முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்கள், தற்போதும் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள், எதிர்காலத்திலும் அதிகாரத்தில் இருக்கக் கூடிய அரசியல்வாதிகளும் காணிகளை கையகப்படுத்துகின்றனர். இந்திய வீட்டுத் திட்டத்திற்கு முறையற்ற பயனாளிகளைத் தேர்வு செய்வதிலும் அவர்கள் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.
காணி மற்றும் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் நன்கு அறியப்பட்ட சர்வதேச தர உரிமைகளின் அடிப்படையில் ஜெனிவா பிரகடனத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன். வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதும், மக்களிடம் காணிகளை மீளக் கையளிப்பதும் மனிதாபிமான ரீதியில் கையாளப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவ வெளியேற்றம், காணிகளைக் மீளக்கையளித்தல் என்பன மனிதாபிமான ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்